Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 93

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 93

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 93

 வசனம் : 53

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌

 ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

 அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் ↔  وَاَقْسَمُوْا بِاللّٰهِ

↔ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ

இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக

 கூறுங்கள் சத்தியம் செய்ய வேண்டாம் ↔ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ 

 (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான் ↔ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌

நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்↔ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏ 

இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி:) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக. 

❤ வசனம் : 54

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ‌ؕ

وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا‌ؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ۚ

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்

  அவர்கள் புறக்கணித்தால் ↔ فَاِنْ تَوَلَّوْ

அவருக்கு கட்டளையிடப்பட்டது அவருக்கு ↔ فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ

 உங்களுக்கு கட்டளையிடப்பட்டது உங்களுக்கு ↔ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ‌ؕ

  நீங்கள் கட்டுப்பட்டால் உங்களுக்கு நேர்வழி ↔ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا‌ؕ

وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ↔ ‏ 

இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.

“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply