Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 6

நஜீசின் வகைகள் பாகம் 6

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6

நாய்

இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்:

1. வேட்டை
2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க
3. வீட்டின் பாதுகாப்பிற்காக

لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة

➥   நபி (ஸல்) – எந்த வீட்டில் நாயும் உருவப்படங்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்.

ஒரு முறை ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) விடம் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் சொல்லப்பட்ட நேரத்தில் அவர் வரவில்லை. ஏனெனில் நபி (ஸல்) வின் வீட்டில் கட்டிலின் அடியில் குட்டி நாயொன்று இருந்தது.
நபி (ஸல்) – உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை 7 முறை கழுவுங்கள் அதில் ஒரு முறை மண் சேர்த்து கழுவுங்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply