Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் ( أ )

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் ( أ )

நான்காவது பாடம் ( أ )

Full Lesson:

பாடம் :

 (أ)

الْبَيْتُ : فِي الْبَيْتِ          الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ

الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ       السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ

(ب)

  முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ       ؟                                        

 அவன் அறையில் இருக்கிறான்.             هُوَ فِي الْغُرْفَةِ

மேலும் யாஸிர் எங்கே?                              وَأَيْنَ يَاسِرٌ؟

அவன் கழிவறையில் இருக்கிறன்.          هُوَ فِي الْحَمَّامِ

மேலும் ஆமினா எங்கே?                 وَأَيْنَ آمِنَةُ؟

அவள் சமையலறையில் இருக்கிறாள்.           هِيَ فِي الْمَطْبَخِ

புத்தகம் எங்கே?                                   وَأَيْنَ الْكِتَابُ؟

அது மேஜையின் மீது இருக்கிறது.             هُوَ عَلَى الْمَكْتَبِ

மேலும் கடிகாரம் எங்கே?                          وَأَيْنَ السَّاعَةُ؟

அது கட்டிலின் மீது இருக்கிறது.هِيَ عَلَى السَّرِيْر  

Jaroon Wa Majroorun :

اَلْبَيْتُ – فِي اَلْبَيْتِ

مَرْفُوْعٌ ஆக இருக்கும் الْبَيْتُ வை فِي வந்து مَجْرُوْرٌ ஆக மாற்றி விட்டது. حَرْفُ اَلْجَرِّ – فِي ஜர்ரு செய்யும் எழுத்து எனப்படும்.

ஜர்ருடைய எழுத்துக்கள் வந்தால் அதை பின்தொடரும் اِسْمٌ  مَجْرُوْرٌ ஆக மாற்றி விடும்.

حَرْفُ الْجَرِّ+ اِسْمٌ مَجْرُوْرٌ = جَارٌّ وَ مَجْرُوْرٌ

   اِسْمٌ ஐ حَرْفُ الْجَرّ வந்து مَجْرُوْرٌ ஆக்கியதால் இதற்கு جَارٌ وَ مَجْرُوْرٌ என்று பெயர்.

இந்த இடைச்சொல் إسم க்கு முன்னால் மட்டுமே வரும். இந்த இடைச்சொல் எந்த إسم க்கு முன்னால் வருகிறதோ அதை مجرور ஆக்கி விடும். இந்த இடைச்சொல்லுக்கென்று குறிப்பிட்ட ஒரு அர்த்தம் இல்லை. இது வரும் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் மாறும்.

 

Ayna:

எங்கே? أَيْنَ؟

முஹம்மத் எங்கே?         أَيْنَ  مُحَمَّدٌ؟

அவன் அறையில் இருக்கிறன்    هُوَ فِي الْغُرْفَةِ

أين – إسم إستفهام للمكان

أين – என்பது இடத்தைக்குறிக்கும் கேள்விக்குரிய பெயர்ச்சொல். ( Noun of Question of Place )

 

Singular, Dual & Plural:

ஒருமை (مفرد) Singular

இருமை (مثنى) Dual

பன்மை (جمع) Plural

 

பிரதி பெயர்ச்சொல் – ضَمِيْرٌ  – Dameer :

பிரதிப் பெயர்ச்சொல் ضَمِيْرٌ இரண்டு வகைப்படும். ஒன்று தனித்து வரக்கூடியது ضَمِيرٌ مُنْفَصِلٌ . மற்றொன்று  சேர்ந்து வரக்கூடியது ضَمِيْرٌ مُتَّصِلٌ .

 ضَمِيْرٌ مُنْفَصِلٌ அனைத்தும் مَرْفُوْعٌ.

அரபியில் வேர்ச்சொற்கள் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி அரபியில் வேர்ச்சொற்கள் நான்கு விஷயங்களைக் கொண்டதாக இருக்கும். غاَءِبٌ படர்க்கையாக இருக்கும், مُذَكَّرٌ ஆண்பாலாக இருக்கும், مُفْرَدٌ  ஒருமையாக இருக்கும்,  الْمَاضِ கடந்த காலமாக இருக்கும். 

 

مُتَكَلِّمٌ –தன்னிலை

1st person

مُخاطبٌ –முன்னிலை

2nd person

غاَءِبٌ     –படர்க்கை

3rd person

مُذَكَّرٌ / مُؤَنَّثٌ

ஆண்பால் பெண்பால்

مُؤَنَّثٌ

பெண்பால்

مُذَكَّرٌ

ஆண்பால்

مُؤَنَّثٌ

பெண்பால்

مُذَكَّرٌ

ஆண்பால்

اَنَا

நான்

اَنْتِ

நீ

اَنْتَ

 நீ

هِىَ

அவள்

هُوَ

அவன்

اَنْتُمَا

நீங்கள் இருவர்

اَنْتُمَا

நீங்கள் இருவர்

هُمَا

அவர்கள் இருவர்

هُمَا

அவர்கள்இருவர்

نَحْنُ

நாங்கள்

اَنْتُنَّ

நீங்கள் பலர்

اَنْتُمْ

நீங்கள் பலர்

هُنَّ

அவர்கள் பலர்

هُمْ

அவர்கள்பலர்

  ஆகவே ஆண்பால், படர்க்கை, ஒருமை என்பதை இந்த هُوَ குறிக்கும்.

 

Huva, Hiya:

அரபியில் மனிதர்களை குறிப்பிடுவது போல மனிதன் அல்லாதவற்றிற்கும் هو، هي என்றே குறிப்பிட்டாலும், மனிதன் அல்லாதவற்றை குறிப்பிடுகையில் அதற்கு ” அது ” என்றே பொருள் தரும்.

 

Thamarbootha:

ஒரு வார்த்தையின் இறுதியில் அதாவது ة வில் முடியக்கூடிய பெயர்கள் பெரும்பாலும் பெண்பாலாக இருக்கும். சில பெயர்கள் ஆண்பாலாகவும் இருக்கும்.

உதாரணம் – خديفة، اسامة

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply