Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 83

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 83

ஹதீஸ் பாகம்-83

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب من جاهد نفسه في طاعة الله

அல்லாஹ்வை வழிபடுவதற்காக போராடுதல்

معاذ بن جبل رضي الله عنه قال بينما أنا رديف النبي صلى الله عليه وسلم

ليس بيني وبينه إلا آخرة الرحل فقال يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك ثم

سار ساعة ثم قال يا معاذ قلت لبيك رسول الله وسعديك ثم سار ساعة ثم قال يا

معاذ بن جبل قلت لبيك رسول الله وسعديك قال هل تدري ما حق الله على عباده

قلت الله ورسوله أعلم قال حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا ثم

سار ساعة ثم قال يا معاذ بن جبل قلت لبيك رسول الله وسعديك قال هل تدري ما

حق العباد على الله إذا فعلوه قلت الله ورسوله أعلم قال حق العباد على الله أن لا

يعذبهم

முஆத் இப்னு ஜபல் (ரலி) – நான் நபி (ஸல்) உடன் ஒட்டகத்தில் பின்னாலிருந்தேன் எனக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் சாய்மானம் தவிர வேறெதுவும் இருக்கவில்லை நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் சிறிது நேரம் சென்றார்கள் பிறகு நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் சிறிது நேரம் சென்றார்கள் பிறகு நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன்  அல்லாஹ்விற்கு அடியார்கள் செய்யவேண்டிய கடமை என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்றேன் அடியார்கள் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு இணை வைக்கக்கூடாது பிறகு சிறிது நேரம் சென்றார்கள் நபி (ஸல்) முஆதே; என்றழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்றேன் அடியார்கள் இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை சரியாக செய்தால்; அடியார்கள் மீது அல்லாஹ்வின் கடமை என்னவென்று தெரியுமா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்றேன் அதற்கு நபி (ஸல்) அல்லாஹ் அவர்களை நரகத்தில் வேதனை செய்யக்கூடாது என்பதாகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply