Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 14

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 14

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 14

🌷 மத்தனை எவ்வாறு அணுகவேண்டும் என்ற அணுகுமுறையின் முன்னோடி ஆயிஷா (ரலி)என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.

🌷 ஆயிஷா (ரலி)அவர்களின் தனி நிலைப்பாடுகள் استدراك عائشة  என்ற தலைப்பில் 3-4 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறன.

அவையனைத்தையும்  தொகுத்து ஒரே புத்தகமாக  السيدة عائشة وتوثيقها للسنة என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ எழுபத்து ஐந்து  ஹதீஸுகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் தனி நிலைப்பாடு எடுத்ததாக கூறப்படுகிறது.

🌷 மத்தனை பற்றி கற்கும்போது استدراك عائشة வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன?

ஆயிஷா (ரலி)  இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களின் விஷயங்களில் தனி நிலைப்பாடுகள் எடுத்திருப்பினும் குறிப்பிட்ட நான்கு  பேர்களின் சில அறிவிப்புகளில் தனி நிலைப்பாடு அதிகமாக எடுத்துள்ளார்கள்.

1. உமர்( ரலி) – எட்டு விஷயங்கள்

2. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – எட்டு  விஷயங்கள்

3. அபூஹுரைரா (ரலி) – ஒன்பது விஷயங்கள்

4. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) – ஆறு விஷயங்கள்.

🌷 ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களும் உள்ளனர் ஏற்காதவர்களும் உள்ளனர்.

உதாரணம் :-

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 29

புஹாரி Volume :5 Book :67

🌷 இந்த ஹதீஸுக்கு ஆயிஷா (ரலி) முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தான் இந்த விஷயங்களில் அபசகுனம் இருக்கிறது என்று விளக்கமளித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply