Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 15

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 15

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 15

ஆயிஷா (ரலி) எந்த அடிப்படையில் தன்னுடைய தனி நிலைப்பாட்டை  முன்வைத்தார்கள்?

 ஹதீஸின் தொடரில் சில திருத்தங்களுடன் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது.

❁ குர்ஆனை முன்வைத்து கருத்து கூறினார்கள் .

❁ அவர்களது சொந்த புரிதலாக கூறினார்கள் .

❁ தனிப்பட்ட விஷயங்களின் காரணமாக தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள்.

❁ மற்றவர்கள் மறந்தவற்றை ஞாபகமூட்டும் வகையில் தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள்.

உதாரணம் :-

  1. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரரே!’ எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர்(ரலி) ‘உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?’ எனக் கேட்டார்.

புஹாரி Volume :2 Book :23

🍃 ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறிய விளக்கமாவது :- ஒருவரது சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் நிலையில் எவ்வாறு பிறர் அழுவதால் மய்யித் வேதனைசெய்யப்படும் என்பதாகும்.

🍃 3318. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

புஹாரி Volume :3 Book :59

🍃 3467. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புஹாரி Volume :4 Book :60

🍃 மேற்கூறப்பட்ட ஹதீஸுகளுக்கு ஆயிஷா (ரலி)யின் தனிப்பட்ட கருத்து – ஒரு முஃமின் கண்ணியமானவன். பூனையை கட்டிப்போட்ட சிறிய விஷயத்திற்கு அல்லாஹ் அவரை நரகில் புகுத்த மாட்டான் என்று கூறினார்கள்.

🍃 அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும்போது தங்களது பின்னல்களை அவிழ்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

🍃 ஆயிஷா (ரலி) அதை மறுத்து நாங்கள் கடமையான குளிப்பை குளிக்கும்போது எங்கள் தலைகளை மூன்று முறை கோதி விடுவோம். ஆனால் பின்னல்களை அவிழ்த்ததில்லை என்று கூறினார்கள்.

🍃 ஆயிஷா (ரலி )அளவு கடந்த ஞாபக சக்தியும் அளவு கடந்த அறிவும் கிடைக்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.

உதாரணம்:

  عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَمَرَتْ أَنْ يَمُرَّ بِجَنَازَةِ سَعْدِ بْنِ أَبِي

وَقَّاصٍ فِي الْمَسْجِدِ، فَتُصَلِّيَ عَلَيْهِ، فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ: مَا أَسْرَعَ مَا

نَسِيَ النَّاسُ، «مَا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سُهَيْلِ ابْنِ الْبَيْضَاءِ

إِلَّا فِي الْمَسْجِدِ»

🍃 சஹத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களது ஜனாஸாவை பள்ளியில் தொழவைக்குமாறு கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் பள்ளியில் ஜனாஸா  தொழவைப்பதா என்று சர்ச்சை எழுப்பியபோது. ஆயிஷா (ரலி)- மக்கள் இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டார்களே !!! சுவைத் இப்னு பைளா (ரலி) என்ற ஸஹாபி மரணித்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு பள்ளியில் தொழவைத்தார்களே என்று கூறி  ஞாபகமூட்டினார்கள்.

🍃 அதிகபட்சமாக ஆயிஷா (ரலி )தனி நிலைப்பாடு எடுத்தது 25 – 75 ஹதீஸுகள் என கூறப்படுகிறது. இதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடும் இருக்கிறது.

🍃 ஆயிஷா (ரலி)யின் தனி நிலைப்பாட்டை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இருப்பினும் மத்தன் ரீதியாக ஹதீஸுகளை அணுகவேண்டும் என்பதில் ஆயிஷா( ரலி) முன்னோடியாக திகழ்கிறார்கள் என்பதில் உலமாக்கள் ஒருமித்த கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply