Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 2

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 2

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 2

علم الحديث ஹதீஸ்களை பற்றிய அறிவு

ஹதீஸ் துறையில் உழைப்பவர்கள் தான், ஹதீஸ் துறையில் ஆய்வுகள் மேற்கொள்பவர்கள்  தான், ஹதீஸ் துறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள் தான் உண்மையில் அல்லாஹ்வின் நபியின் குடும்பத்தார் ஆவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை காணவில்லை அவர்களுடன் பேசவில்லை எனினும் அவர்களது மூச்சுக்காற்றோடு இரண்டறக்கலந்தவர்கள் ஆவர். என்றொரு கவிஞர் கூறினார்.

ஹதீஸ்  கலையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அடிக்குறிப்பு

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) திருமணம் செய்யவில்லை.

குறிப்பாக சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷேக் யூனுஸ் (ரஹ்) அவர்களை கூறலாம்.அவர்கள் வாழ்நாளை முழுவதும் திருமணம் செய்ய நேரம் ஒதுக்காமல் ஸஹீஹ் புஹாரியில்(அதன் விளக்கவுரை மற்றும் அது சார்ந்த பணிகளில்) அர்ப்பணித்தவராவார்.

❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) யா அல்லாஹ் என்னுடைய கலீஃபாக்களுக்கு ரஹ்மத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் அப்போது அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது அதற்க்கு நபி (ஸல்) என்னுடைய ஹதீஸுகளை அறிவித்து அதை மக்களிடம் கற்றுத்தருபவர்கள்.

❖ இமாம் சுஃபியான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள் அதிகமான கல்விகள் இருக்கிறது ஆயினும் உலூமுல் ஹதீஸை விட சிறந்த கல்வியை நான் அறியவில்லை.

❖ இமாம் இப்னு கித்தான் (ரஹ்) அஹ்லுஸ்சுன்னாஹ் வினருக்கும் பித்அத் வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பித்அத் வாதிகளிடம் ஹதீஸை சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள்.நேரான வழியிலுள்ளவர்களிடம் அதை சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

மனிதர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்கள்  

لا يزال ناس من أمتي منصورين، لا يضرهم من خذلهم حتى تقوم الساعة

இந்த சமூகத்தில் சில மனிதர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு மாறு செய்பவர்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது. (அந்த நபர்கள் யார் என விளக்கம் கேட்டபோது; ஹதீஸ்கலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணிப்பவர்கள்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply