Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 8

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 8

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 8

المتن இல் உலமாக்களின் பங்கு

🏵 ناسخ ومنسوخ – மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்

🏵 مختلف الحديث ومشكل الحديث – முரண்பட்ட செய்திகள்

🏵 سبب الورود – நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள்

ناسخ ومنسوخ

மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்

 كنت نهيتكم عن زيارة القبور فزوروها فانها تذكركم الموت ] رواه مسلم

🍃 நபி (ஸல்) – இறந்தவர்களின் கப்ருகளை சந்திக்க செல்வதை தடுத்திருந்தேன் ஆனால் நீங்கள் கப்ருகளுக்கு செல்லுங்கள் அது உங்கள் மறுமை சிந்தனையை அதிகரிக்கும் (முஸ்லீம்)

 تَوَضَّؤوا مِمَّا مَسَّتِ النَّارُ

🍃 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நெருப்பு தீண்டியதை தின்றால் உளூ செய்யுங்கள் – (منسوخ – மாற்றப்பட்டுவிட்டது) (முஸ்லீம்)

🍃 நபி (ஸல்) அவர்கள் ஆட்டை சாப்பிட்டு விட்டு உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ் அதற்கு பின்னர் வந்தது (ناسخ – மாற்றக்கூடியது )

🍃 பொதுவாக இவ்வாறான ஹதீஸுகளை அறிவிக்கையில் முதலில் منسوخ ஐ அறிவித்து விட்டு  ناسخ  ஐ அறிவிப்பார்கள்.

🍃 அலி (ரலி)ஒரு நீதிபதியிடம்  ناسخ ومنسوخ ஐ பற்றி தெரியுமா என்று கேட்டார்கள் .அவர்கள் இல்லையென்றதும் هلكت و أهلكت  (நீயும் அழிந்து மக்களையும்  அழித்து விட்டாய்) என்றார்கள்.

உதாரணம்:-

சாராயம் படிப்படியாக தடுக்கப்பட்ட விவரமில்லாமல் ஒருவர் குர்ஆனை அணுகினால் அவர் சாராயத்தை ஹலால் என்று புரிந்து கொள்ளக்கூடும். ஆகவே ناسخ ومنسوخ சம்மந்தமான அறிவு குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply