Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 7

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 7

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 7

ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம்

💕 ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள்

💕 ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை.

💠 மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன.

 

அல் குர்ஆன் ஹதீஸ் அல் குதுஸி
எந்த மாறுதலும் ஏற்படாது மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது
தெளிவான வஹீ.وحي جلي وحي خفي. மறைவான வஹீ
குர்ஆன் ஓதினால் ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை இவற்றை ஓதினால் குர்ஆனைப்போல நன்மை கிடைக்காது.
தொழுகையில் ஓதலாம் தொழுகையில் ஓத முடியாது
அர்த்தத்தை அறிவித்தல் கூடாது அர்த்தத்தை அறிவித்தல் கூடும் الرواية بالمعنى

 

💠 ஹதீஸுகள் அனைத்தும் கிரந்தங்களில் தொகுக்கப்பட்ட காரணத்தினால் இன்றைய நிலையில் الرواية بالمعنى நாம் செய்யக்கூடாது.

💠 அறிஞர்களின் கூற்றுப்படி சில ஹதீஸுகள் வேறு வேறு வார்த்தைகளில் அறிவிக்கப்படுவது الرواية بالمعنى  -வினால் அல்ல நபி (ஸல்) வெவ்வேறு சபைகளில் அந்த ஹதீஸுகளை  அவ்வாறு அறிவித்திருக்கும் காரணமே (اختلاف المجالس) என்கின்றனர்.

ஹதீஸில் 2 விஷயங்களை நாம் பார்க்கலாம்

💕 சனத் السند (அறிவிப்பு தொடர்)

💕 மத்தன்  المتن (செய்தி)

💠 இந்த السند – தைப் பற்றி உள்ள கல்விக்கு علم الرواية என்றும் المتن – னைப் பற்றி உள்ள கல்விக்கு علم الدراية என்றும் கூறுவார்கள்.

💠 அரபு மொழியில் المتن என்றால் முதுகுத் தண்டு என்று பொருள் ஆகும்.  மூல புத்தகங்கள் அனைத்தும் المتن என்று அழைக்கப்படும்.

💠 இஸ்லாத்தை எப்போதும் ஆய்வு செய்யும் மேற்கத்தியர்கள் (orientalist – المستشرقون) என்றழைக்கப்படுவர். இவர்களின் கூற்றுப்படி இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸில் எப்போதும்  السند ஐ மட்டுமே ஆய்வு செய்கின்றனர் மாறாக المتن ஐ ஆய்வு செய்வதில்லை என்பார்கள். ஃபிரன்ச் புரட்சியின் பின்னணி உடைய சிலர் இஸ்லாத்தை நவீன (modern) வரையறைகள் வைத்து அணுக ஆரம்பித்தபோது ஹதீஸுகளை மீண்டும் மறுஆய்வு செய்யவேண்டுமென முடிவெடுத்தனர்.

💠 இதனடிப்படையில் தான் பல ஹதீஸுகள் மேற்கத்தியர்களின் தாக்கத்தால் மறுக்கப்பட்டன.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply