Home / கட்டுரை / தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும்

கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!

—————————————————————————————————————————————-

அரசியல் வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் இன்று இந்த ‘ தனிநபர் வழிபாடு’ , என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் , சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நல்ல சிந்தனையாளர்கள் என்று யாரும் இதில் விதி விலக்கு இல்லை,

என் தலைவர் கூறிவிட்டார், எனது ஆசிரியர் சொல்லி விட்டார்,எனது இயக்கம் இவ்வாறு கூறிவிட்டது என்று தங்களின் அறிவு கண்களை மூடி ஏன் , எதற்காக என்று எந்த பகுத்தறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது , தன் தலைவனோ அல்லது தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அறிஞர்கள் சொன்னால் தான் இறை கட்டளைகளை கூட நம்புவர் ,

அந்தளவுக்கு அவர்களின் தனி நபர் வழிபாடு அவர்களை சத்தியத்தை விட்டும் தூரமாக்கி விட்டது ,

வெள்ளை காகம் பறக்கிறது என்று அவர்களின் அறிஞர்களால் கூறப்பட்டால் ஆம் என்று முன்மொழிவார்கள்,

அதுபோல இறைவனால் விலக்கப்பட்ட ஹராமை அவர்கள் அறிஞர் பெருமக்கள் ஹலால் என்று சொன்னால் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றும் செம்மறி ஆட்டுமந்தைகள் ,

ஆனால் நமது ஸலஃபு ஸாலிஹீன்களாகிய சத்திய சஹாபாக்களின்  பாதையில் நடந்து சென்ற சங்கையான இமாம்கள் நமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்,

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் தங்களின் ” பிதாயா வன் நிஹாயா“, என்ற புத்தகத்தில்” எனது ஆத்மீக குருவாகிய ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களுக்கும் சில மார்க்க    சட்டதிட்டங்களை தொகுத்தெடுத்த விடயங்களில் சில சருக்குதல்கள் உள்ளன”  என்று  கூறுகிறார்கள்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் மாலிக் , இமாம் அபூஹனீஃபா தனக்கு முந்திய கால அறிஞராகஇருந்தாலும் அவர்களுடைய சிலஆய்வுகளை விமர்சனம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு மாற்றமான தன்னுடைய ஆய்வுகளை  இமாம் ஷாஃபி அவர்கள் தனது புத்தகமாகிய “அர்ரிஸாலாவில் “, பதிவு செய்திருக்கிறார்கள்.

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின்உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின்உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒருகட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும்விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாதநேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இதுபோன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத்தேடுபவனை அக்கல்வி அவன் அறியாதவிதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்)

-நூல் : மத்கல் – இமாம் பைஹகீ (பாகம்: 1, பக்கம்: 211)

*ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும்பின்பற்று!

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸைஅறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபிஅவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம்ஷாஃபி அவர்கள் “எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ்அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப்பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடையஅறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம்சான்று பகர்கிறேன்’ என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கிசுட்டிக் காட்டினார்கள்.

-நூல் : முஹ்தஸர் அல்முஅம்மல்  (பாகம்: 1 பக்கம்: 57)

*தவறு இல்லாத நூல்கள் இல்லை!

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். “நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ்”அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்துவருமென்றால் அதிலே அவர்கள் அதிகமானமுரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்’ என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப்புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால்நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்துதவறானது. நபிவழி தான் சரியானதுஎன்பதாகும்)

-நூல் : முஹ்தஸர் அல்முஅம்மல் (பாகம்: 1 பக்கம்: 57)

ஆனால் இன்று இஸ்லாத்தை  தான்  பின்பற்றும் அறிஞர்களின் கருத்துகளில் மட்டுமே நாம் தேடுகிறோம் , இஸ்லாமிய மூல ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் .

இஸ்லாம் இதை வேறிலேயே கிள்ளி எறிகிறது , தனி நபரை பின்பற்ற ஒரு அளவு கோளை வைத்திருக்கிறது,

அதுதான் பகுத்தறிவான இஸ்லாமிய ஆதாரங்கள் ,  என்னை பின்பற்றுவதாக இருந்தால் நான் ஆதாரங்கள் தரும் வரை நீர் என்னிடம் கேட்க கூடாது என்று இறை நேசர் கிளிர் (அலை) நபி மூசா ( அலை) அவர்களுக்கு சொன்னார்கள் அதைத்தான் அல்குர்ஆன் நமக்கு ஒரு வழிகாட்டலாக பின் வரும் வசனத்தில் குறிப்பிடுகிறது

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِىْ فَلَا تَسْــٴَــلْنِىْ عَنْ شَىْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَـكَ مِنْهُ ذِكْرًا

(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

அல்குர்ஆன்-  18:70

—————————————————————————————————————————————–

கட்டுரை தொகுப்பு,

உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி.

Check Also

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், …

One comment

  1. Very nice explanation ,masha allah

Leave a Reply