Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2

Al Islah WhatsApp Class Fiqh class 4 suttham part 2

 

ஃபிக்ஹ் பாடம் 4
சுத்தம் பாகம் 2
       I.
மழைநீர் சுத்தமானது ஆதாரம்:

சூரா அன்ஃபால் (8:11)                            
إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

 

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

 

சூரா ஃபுர்கான் (25:48)
وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا
(வானத்தில் இருந்து உங்களை சுத்தப்படுத்தக் கூடிய தண்ணீரை அல்லாஹு இறக்கிவைக்கிறான்)

II.        
தண்ணீர், ஆலங்கட்டி, மேலும் பனிக்கட்டி சுத்தமான நீர் என்பதற்கான ஆதாரம் :
اللَّهُـمَّ باَعِـدْ بَيْـنِي وَبَيْنَ خَطَـاياَيَ كَماَ باَعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبْ، اللَّهُـمَّ نَقِّنِـي مِنْ خَطَاياَيَ كَمـَا يُـنَقَّى الثَّـوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسْ، اللَّهُـمَّ اغْسِلْنِـي مِنْ خَطَايـَايَ بِالثَّلـجِ وَالمـَاءِ وَالْبَرَدِ

பொருள்: இறைவனே! கிழக்குக்கும், மேற்குக்கும் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! எனக்கும் எனது தவறுகளுக்கும் மத்தியில் இடை வெளியை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ்! அழுக்கிலிருந்து வெண்ணிற ஆடையைத் தூய்மைப்படுத்துவது போன்று! என்னுடைய தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்து-வாயாக! யா அல்லாஹ்! தண்ணீர், பனி, மற்றும் பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களைப் போக்குவாயாக!.

இயன்றவரை இந்த துஆவை பாடமாக்கி தொழுகையில்
தக்பீருக்கும் ஃபாத்திஹாவுக்கும் இடையில் ஓதிவாருங்கள்


Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply