Home / கட்டுரை / கட்டுரைகள் / உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…

எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி), அழைப்பாளர், அல்- கப்ஜி, இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா.

நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்காக மில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் இவை போதியளவு வெற்றி இல்லை என்று சர்வதேச கனிப்பீடுகள், புள்ளி விபரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பட்டினியை ஒழிக்க எத்துனை மாநாடுகள், அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் என பல நூறு முயற்சிகள், செயற்திட்டங்கள் நாளாந்தம் முன்வைக்கப்பட்ட போதிலும் இவை அனைத்தும் குறித்த இலக்கை அடைவதில் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்பது தான் இருதி முடிவாக இருக்கின்றது.

பொருளாதார நிபுணர்கள், துரை சார் வல்லுனர்கள், கலாநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என்று ஒரு நாட்டின் பிரதான துரை சார் நிபுணர்கள் ஒன்று சேர்ந்தும் இதற்கு தீர்வு காண்பதில் தோல்வியடைவதனை பார்கின்றோம்.

ஏன் இந்த அவலநிலை ஆட்கொல்லி நோய்களுக்கும் பெரும் பெரும் வைரஸுகளுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னாவது நிவாரனத்தையும், மறுந்து வகைகளையும் கண்டு பிடிக்கும் இந்த உலகமகா வல்லுனர்கள் வாழும் நவீன (ஸ்மார்ட்) உலகத்தில் வறுமைக்கு மறுந்து கண்டு பிடிக்க முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய அதிசயமாகும். உண்மையில் இதற்கு தீர்வை கண்டு பிடிப்பவருக்கு முழு உலகமே தலை வணங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆம் முழு உலகத்தையும் படைத்து அவர்களின் அறிவாற்றல் மற்றும் பகுத்தறிவை படைத்த எல்லாம் வல்ல இறைவன் இந்த பட்டினிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குல் சாவுமணி அடித்திடும் மிகப் பெரும் செயற்திடடம் ஒன்றை முன்வைத்துள்ளான் என்றால் உண்மையில் அவன் தான் உலகத்தில் வணக்கத்திற்கு தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமுடியாது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்சி நிறுவகத்தின் பட்டினிக் கொடுமையால் வாழும் நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இலங்கைக்கு 84 வது இடம்.. இவ்வாறு உலக வங்கி, ஐ.நா, ஐ.நா வின் உப பிரிவுகளான யுனிஸ்கோ, யுனிஸெப், உலக சுகாதார அமைப்பு என எல்லா சர்வதேச அமைப்புகளும் ஒன்றினைந்து வருடாந்த அமர்வுகள், வட்டமேசை மாநாடுகளை, திறந்த பத்திரிகை மாநாடுகளை, எண்ணியல் பொருளாதார கொள்கை (Digital Economy) என ஏகப்பட்ட திட்டங்களை முன்வைத்தும் வெல்ல முடியாத வறுமைக்கு வல்லவன் அல்லாஹ் தீர்வு சொல்கின்றான். அது தான் மனுடத்திற்கு ஏற்ற மார்கமான இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாம் நிலை கடமை என வர்னிக்கப்படும் ஸக்காத் ஆகும்.

ஸக்காத் எனும் கடமை இருதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஊடாக மாத்திரம் உலகிற்கு இறைவன் அறிமுகப்படுத்தவில்லை. மாற்றமாக நபியவர்களுக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்களிலும் அச்சமூகங்களுக்கு அனுப்பட்ட நபிமார்களுக்கும் ஸக்காத் திட்டத்தை வலியுருத்தியுள்ளான். அவர்கள் மனித குலத்தை ஏழ்மையில் இருந்து மீட்க போராடினார்கள் என்ற வரலாற்றுச் சான்றுகளை அல்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ ۖ وَكَانُوا لَنَا عَابِدِينَ

இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக – தலைவர்களாக – நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும் நன்மையுடைய செயல்களைக் புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் – அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர். (21: 73)

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ ۚ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا

(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார். (19: 54,55)

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (2: 83)

وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا

”இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19: 31)

இப்படி பல நபிமார்கள் அல்லாஹ்வை வணங்குவதை தமது தலையாய பணியாக மக்களுக்கு ஏவிய அதே வேலை உலக மக்களின் வாழ்வாதாரம் சீர் பெருவதற்கு பொருளாதார ரீதியில் மக்கள் செலுமையான நிலையை அடைவதற்கு ஸக்காத்தையும் தமது தூதுத்துவத்தின் பிராதான அங்கமாக மக்களுக்கு ஏவியதை அவதானிக்க முடிகின்றது. ஒரு சமுதாயம் வறுமை, பட்டினியில் இருந்து விடுபடுவதன் மூலமே இறைவணக்கத்தில் உயிரோட்டமாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது. எனவே தான் எம் பெருமானார் நபிகள் நாயம் கூட வறுமையை அதிகம் பயந்தார்கள். வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தார்கள் என்பதை அவர்களின் வரலாறு பரைசாற்றுகின்றது. எந்தளவுக்கு என்றால் வறுமை ஒரு இறைவிசுவாசியை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என நபியவர்கள் பயந்தார்கள். ஆதலால் ஸக்காத் திட்டத்தை மிகத் திட்டமிட்டு நிறைவேற்றியதன் மூலம் பாரிய சமூக எழுச்சியை நபியவர்கள் இஸ்லாமிய சாம்ராஜியத்தில் ஏற்படுத்தினார்கள்.

ஸக்காத் திட்டம் மிகச் சரியாக நிறைவேற்றப்படும் போது பின்வரும் பெருபேறுகளை மிக் குறுகிய காலத்தினுல் கண்டு கொள்ளலாம்.

1) ஏழைகளின் தேவை நிறைவு செய்யப்பட்டு ”போதும்” என்ற நிலை உருவாகின்றது.
2) செல்வந்தனுக்கும் ஏழைக்குமிடையே உறவுப் பாலத்தை உறுவாக்கி நேசத்தை நிலையாக்குகின்றது.
3) வாரி வழங்கும் தன்மையை விசுவாசிகளிடம் ஏற்படுத்தும்.
4) உள்ளத்தை கஞ்சத்தனத்திலிந்து தூரமாக்கி தூய்மைப்படுத்துகின்றது.
5) மனிதனை பாவங்களில் இருந்து தூரப்படுத்தி, தவரு செய்வதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
பணக்காரன் தனது செல்வதில் இருந்து ஏழைகளுக்காக செலவு செய்யாத போது அவன் பாவக்கரைகளை சுமக்கின்றான்.
ஏழையும் செல்வந்தர்களின் பொருளாதாரத்தின் மீது ஆசை வைத்து களவு, கொள்ளை என பாவங்களில் ஈடுபடுகின்றான். இவ்விருசாராரும் பாவக்கரைகளை சுமக்காமல் இருக்க ஸக்காத் எனும் இறைத்திட்டம் உறுதுனையாக இருகின்றது.

மனித மூளைகளால் அங்கீகரிக் கூடிய அமைப்பில் ஸக்காத் திட்டத்தை இஸ்லாம் முன்வைக்கின்றது. எல்லாப் பிரஐகளும் வரி கட்ட வேண்டும் அல்லது வரி செலுத்துவதில் பங்குதாரர் ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதை போன்ற ஒரு நிலையை ஸக்காத் திட்டத்தில் காணமுடியாது. ஸக்காத் கடமையாவதற்கு உச்ச வரம்பை இஸ்லாம் அறிமுகப்படுத்தி குறித்த உச்சவரம்பை அடைந்த மறு கணமே ஸக்காத்தை கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்க வில்லை. இன்றைய சூழலில் ஒருவன் ஒரு குறித்த வியாபாரத்தை ஆரம்பித்ததும் அல்லது குறித்த சரக்குகளை இறக்குமதி செய்யும் போதே அதை விற்று பணமாக்குவதற்கு முன்னால் பல வரிகளை கட்ட வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. இதனால் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பவர்கள் பல்வேறு சிக்கள்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இதன் விளைவாக குறித்த பொருளின் சந்தை பெருமானம் அதன் உற்பத்தி பெருமானத்தில் இருந்து பல மடங்குகளாக்கி சந்தைப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். எனவே தொழிலை ஆரம்பித்ததும், உச்சவரம்பை அடைந்ததும் ஸக்கத் என்பதற்கு பகரமாக உச்சவரம்பை அடைந்து ஒரு வருடம் பூர்தியாக வேண்டும் என்ற பிரதான சரத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வளர்ந்து வரும் செல்வந்தர்களை பாதிக்காத ஒரு நிலையாகும். ஏளவே பல கோடிகளுக்கு சொந்தக் காரர்களையும் இத்திட்டம் பாதிப்பதில்லை. வெறும் 2.5 வீதம் மாத்திரமே ஸக்காத் கொடுக்க வேண்டும் என வழிகாட்டியிருப்பதால் அரசாங்களுக்கு வளங்கும் 15 வீதம் தொடக்கம் 20 வீதம் டெக்ஸில் இருந்து விரண்டோட மேற்கொள்ளப்படும் திள்ளுமுல்லுகள் ஸக்காத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்பு குறைவாகவே இருகின்றது.

ஸக்காத் ஒரு சமுதாயத்தில் சரிவர பேணப்பட்டால் அந்த சமூகத்தில் இருந்து முழுமையாக வறுமையை ஒழிக்காலாம் என்பதனை வெறும் கோட்பாட்டளவில் மாத்திரம் இஸ்லாம் கூறிவிட்டுச் செல்லாது அதனை செயற்படுத்தி காட்டி வரலாற்றுச் சாதனை நிகழ்தியுள்ளது என்பதனையும் மறந்துவிடலாகாது. நேர்வழி நடந்த கலீபாக்கள் காலத்திலும் குறிப்பாக இரண்டாம் உமர் என்று வர்ணிக்கப்படும் உமையா கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் வெற்றி பெற்றமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய அம்சமாகும்.

வெறும் இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் பொதுப் பணத்தை மிகச் சரியாக கையாண்டு மக்களிடம் வறுமையை ஒழிப்பதற்கு திட்டங்களை வகுத்து ஸக்காத் திட்டத்தை காத்திரமாக முன் வைத்தார். மக்களை பிறரிடம் கையேந்தும் நிலையில் இருந்து உயர்தி ஒரு கண்ணியமான நிலைக்கு வழிகாட்டினார். எனவே தான் அவருடைய காலத்தில் ஸக்காத் திட்டம் பாரிய வெற்றி கண்டு ஸக்காத்தை பெறுவதற்கு தகுதியான ஏழைகள் இல்லை என ஒவ்வொறு பிராந்திய ஆளுனரும் கலீபா இரண்டாம் உமருக்கு கடிதம் எழுதினர் என்றால் தனது சாம்ராஜ்யத்தில் இருந்து ஏழ்மையை முழுமையாக இல்லாதொழிப்பதில் வெற்றி கண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வெற்றி இன்றைய அரசுகளுக்கும் பொதுவாக முழு உலகிற்கும் பெரும் படிப்பினையாகும்.

ஏக இறைவன் முன்வைத்த இத்திட்டதின் ஆழஅகலங்களை சரியாக ஆராய்ந்து இதனை மக்கள் மன்றில் வைப்பதன் ஊடாகவே உண்மையான வெற்றி, நிலையான அபிவிருத்தி, பட்டினிக்கு விடுதலை மற்றும் வறுமை ஒழிப்பு என்பவற்றை மேற்கொள்ளலாம் என்ற மும்மொழிவு சட்டம் இயற்றப்படும் அரங்குகள், பாராளுமன்றங்களில் உரத்த குரலில் எடுத்து வைக்கப்பட வேண்டும். மேலும் இத்திட்டத்தை பேணாதோருக்கு இஸ்லாம் எச்சரித்திருக்கும் தண்டனை முறைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். சக மனிதனுக்கு தண்ணீர் காட்டினாலும் இறைவனிடம் தப்பிக்க முடியாது என்ற உறுதியான நம்பிக்கையின் காரணமாக ஸக்காத் திட்டம் திள்ளுமுள்ளுகளுக்கு அப்பால் சரிவர நிறைவேறி உலக அளவில் மாபெரும் அமைதி மளரும். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி செய்தருள்வானாக!

Check Also

ஸகாத் தொடர்பான சில சந்தகேங்களும், தெளிவுகளும். -2

ஸகாத் தொடர்பான சில சந்தகேங்களும், தெளிவுகளும். -2 மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Leave a Reply