ஸீரா
பாகம் ௦3
ஜாஹிலிய்யா காலத்து நம்பிக்கைகள்
♦️ அவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டிருந்தபோதும்; ஆனால் அவர்களின் புரிதலில் கோளாறுகள் இருந்தன. அல்லாஹ்வின் திருநாமங்களைப்பற்றி தவறாக பயன்படுத்துபவர்காளாக இருந்தார்கள்.
❣ ஸூரத்துல் அஃராஃப் 7:180
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا
كَانُوْا يَعْمَلُوْنَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
- இறைவனுடைய பண்புகள் மற்றும் பெயர்களில் சிலவற்றையெல்லாம் மறுத்தனர். மேலும் மார்க்கம் சொல்லாத பெயர்களை அவர்களாக இறைவனுக்கு சூட்டினர். அவற்றில் தவறான கருத்துள்ள பெயர்களும் அடங்கின.
- இறைவனுக்கு பிள்ளை இருப்பதாக நம்பினார்கள்
- அல்லாஹ் தேவையுடையவன் என நம்பிக்கொண்டிருந்தனர்.
- மலக்குமார்கள் அல்லாஹ்வின் பெண்பிள்ளைகள் என நம்பிக்கொண்டிருந்தனர் ஆயினும் அவர்கள் பெண்பிள்ளைகளை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
- ஜின்ங்கள் அல்லாஹ்வின் கூட்டாளிகள் என நம்பினர். மேலும் அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியில் பங்கு இருக்கிறது என நம்பினர்.
❣ ஸூரத்துல் அன்ஆம் 6:100
وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى
عَمَّا يَصِفُوْنَ
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் – அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
❣ ஸூரத்துந் நஹ்ல் 16:57
وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ
மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).