Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 122

நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான்.

சூரா அபஸ 80:1 – 12

(1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

(2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

(3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

(4)அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.

(5) (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

(6)நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

(7)ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

(8)ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

(9)அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-\

(10)அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

(11)அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

(12)எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

❣நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் முஸ்லிமுக்கு செய்தலும் முஸ்லீம் இல்லாதவருக்கு செய்தலும் சமமே என்று புரிந்துகொள்வோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply