Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-3)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-3)

மூன்றாவது படிப்பினை
தாஈ தன் மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாவார்
يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ 
﴿٢٧: ١٨﴾
(உங்களது வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமான் (அலை) அவர்களும் அவரது படைகளும் உங்களை மிதித்து அழித்துவிடாமலிருக்கட்டும்.)
அந்த எறும்பு முன்நோக்கி வரும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் வழியை விளக்க தனது கூட்டத்திடம் அலைந்தது. அதாவது மரணத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வசிப்பிடங்களுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்பதன் மூலம் தப்பிக்கும் முறையையும்  உங்களை மிதித்தது அழித்துவிடாமல் இருக்கட்டும்,என்பதன் மூலம் எதிர்நோக்கியிருக்கும் அபாயத்தையும் உணர்த்தியது. எனவே அழைப்புப் பணியில்தன் கூட்டம் செல்ல வேண்டிய நேரான பாதையை விளக்குவதுடன் அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக வழிகேடான பாதைகளில் செல்வதன் விளைவை விட்டும் ஷைதான் அலங்கரித்துச் சித்தரிப்பதன் அபாயத்தை விட்டும் அவர்களை எச்சரிக்கவும் வேண்டும்.
அல்லாஹ் பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த விசுவாசி கூறிய வார்த்தைகளைக் கூறுகையில், “(என்னுடைய சமூகமே! இப்பூமியில் நீங்களே மிகைத்தோராக உள்ள நிலமையில் இன்றைய ஆட்சி உங்களுக்குரியதே. அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்துவிட்டால் அதிலிருந்து நம்மைக் காப்பவன் யார்?) எனக் கூறுகிறான். (ஙாபிர்:42)
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் கூறினார்கள்: எனக்கும் உங்களுக்கும் உதாரணம் ஒரு மனிதரைப் போலாகும். அவர் நெருப்பை எரிக்க விட்டில் பூச்சிகள் அதில் விழ ஆரம்பித்தன. அவர் அவைகளை விரட்டிக் கொண்டிருக்கிறார். நானும் நரகை விட்டும் காப்பதற்காக உங்களது இடுப்புக்களைப் பிடித்துத் தடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களோ எனது கையை விட்டும்  நழுவிச் செல்கிறீர்கள்”. (முஸ்லிம்:2385)
     
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் கூறினார்கள்: எனக்கும், அல்லாஹ் எனக்கு கொடுத்தனுப்பியதற்கும் உதாரணம்: ஒரு மனிதரை ஒத்ததாகும். அவர் தனது கூட்டத்திடத்தில் வந்துஎனது இவ்விரு கண்களாலும் எதிரிப் படையைக் கண்டேன். மேலும் நான் தெளிவான எச்சரிக்கை செய்பவனாவேன். எனவே தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள். என்று சொன்னார். ஒரு கூட்டம் அவருக்கு வழிப்பட்டு நிதானமாக இரவோடு இரவாக வெளியேறி பிழைத்துக் கொண்டனர். இன்னுமொரு கூட்டம் அவரைப் பொய்ப்பித்தது. எனவே காலையில் படை வந்து அவர்களைப் பூண்டோடு அழித்து விட்டனர்.” (புஹாரி:6001)
 
  தொடரும்……

Check Also

எழுச்சிக் கொண்ட சமூகம் : கல்வி-தாக்கம்-மாற்றம்

மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப்  பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு …

Leave a Reply