Home / TNTJ விற்கு மறுப்பு / கருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது?

கருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது?

-எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc

தான்தோன்றித்தனமாக சிந்தித்து தங்களின் அறிவிற்கு ஒத்துவராத ஹதீஸ்களையெல்லாம் மறுத்துவருகின்றனர் , ஹதீஸ் மறுப்பாளர்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(பீஜே) , ஏகத்துவப் பிரச்சார ஜமாஅத் ஆகியோர்.

ஹதீஸ் மறுப்பாளர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் பட்டியலில் இந்த ஹதீஸும் இடம்பெற்றிருக்கிறது.

எந்த ஹதீஸைப் படித்தாலும் “இந்த ஹதீஸைத் தூக்கி எறியலாமா?” , “இந்த ஹதீஸில் முரண்பாடு உள்ளதே!” என்ற சிந்தனையுடைய மனதிற்கு எந்த விளக்கங்களும் சென்றடையாது என்பதை முதலில் உங்களுக்கு ஆணியடித்தார்போல் கூறிக்கொள்கிறேன்.

«5688» حدثنا يحيى بن بكير حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال : أخبرني أبو سلمة وسعيد بن المسيب أن أبا هريرة أخبرهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول

((في الحبة السوداء شفاء من كل داء إلا السام)).

قال ابن شهاب والسام الموت، والحبة السوداء الشونيز.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருஞ்சீரக விதையில் சாமைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள் :
சாம் என்றால் மரணம் என்று பொருள். அல்ஹப்பத்துஸ் ஸவ்தா என்றால், (பாரசீகத்தில்) ஷூனீஸ்(கருஞ்சீரகம்) என்று பொருள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)

நூல் : ஸஹீஹ் புகாரி 5688

அத்தியாயம் : 76. மருத்துவம்

மரணம் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்றால் எய்ட்ஸ் , போலியோ உள்ளிட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்திக் காட்டுங்கள் என்று தங்களின் அறிவின்(?) மூலம் வாதங்களை வைத்து இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படை :*آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். “அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு” எனக் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 2 : 285

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய அனைத்தையும் செவியேற்று அதற்கு கட்டுப்படுபவனே இறைநம்பிக்கையாளன். மாறாக தங்களுடைய அறிவை வைத்து இஸ்லாத்தை எடை போடக்கூடாது.

நமது அறிவின் நிலை :

وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا

ஆனால், உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞானம் வழங்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 17 : 85

நமது அறிவால் அனைத்தையும் சிந்திதுவிட முடியாது. அல்லாஹ் எதை சிந்திக்கச் சொல்லியிருக்கிறானோ அவற்றை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும்.

எப்படி விளங்குவது ? :

மேற்கூறிய ஹதிஸில் மரணம் தவிர அனைத்திற்கும் நிவாரணம் உள்ளது என நபிகளார் கூறியுள்ளார்கள். அதேபோல் ஒவ்வொரு நோய்க்கும் சிலமுறைகள் உண்டு. அந்த முறையில் சிகிச்சை செய்தாக வேண்டும். இதை பின்வரும் ஹதீஸில் விளங்கலாம்.

«5687» حدثنا عبد الله بن أبي شيبة حدثنا عبيد الله حدثنا إسرائيل عن منصور عن خالد بن سعد

قال خرجنا ومعنا غالب بن أبجر فمرض في الطريق، فقدمنا المدينة وهو مريض، فعاده ابن أبي عتيق فقال لنا عليكم بهذه الحبيبة السوداء، فخذوا منها خمسا أو سبعا فاسحقوها، ثم اقطروها في أنفه بقطرات زيت في هذا الجانب وفي هذا الجانب، فإن عائشة حدثتني أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول :

((إن هذه الحبة السوداء شفاء من كل داء إلا من السام)).

قلت وما السام قال الموت.

எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஏழு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், “நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமை”த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அபீ அ(த்)தீக்(ரலி)

நூல் : ஸஹீஹுல் புகாரி 5687

அத்தியாயம் : 76. மருத்துவம்

இந்த ஹதீஸில் நோய்வாய்ப்பட்ட ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) என்ற நபித்தோழருக்கு நிவாரணம் கிடைக்க கருஞ்சீரகத்தைப் பயன்படுத்துமாறு இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) என்ற நபித்தோழர் சொல்கிறார். மேலும் அதன் முறையையும் கற்றுத்தருகிறார்.

ஆக , ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் உண்டு என்பது போல ஒவ்வொரு முறையும் இருப்பதை நாம் அறியலாம்.

அவர்களின் அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கூட ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு முறை உண்டு என்பதுதான் சாத்தியம்.

ஆங்கில மருத்துவம் , சித்த வைத்தியம் உள்ளிட்ட பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு முறை கையாளப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் கூட ஒரே ஒரு நோய்க்கு பல வித மருந்துகள் , பலவித முறைகள் இருக்கின்றன. இப்படி கண்கூடாக அன்றாட வாழ்வில் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அதேபோல எல்லாவற்றிற்கும் ஒரு கால அவகாசமும் உண்டு. மருந்தை உட்கொண்டவுடன் எந்த நோயும் குணமடைந்து புது மாப்பிள்ளை போல ஓடி ஆடி விளையாட முடியாது. சில நோய்களுக்கு சில நாட்கள் மருந்துகள் எடுக்க வேண்டும். சில நோய்களுக்கு சில மாதங்கள் வரை மருந்துகள் எடுக்க வேண்டும். சில நோய்களுக்கு சில வருடங்கள் வரை மருந்துகள் எடுக்க வேண்டும். சில குறிப்பிட்ட கால அவகாசம் கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று இருக்க முடியாது. எல்லா மருந்துகளிலுமே இப்படியான கால அவகாசம் உண்டு.

இவையனைத்தையும் மீறி அல்லாஹ் நோய்வாய்ப்பட்ட மனிதனுக்கு என்ன நாடியுள்ளான் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கையில் அறிவற்றத்தனமாக பேசிவிட்டு அறிவாளிபோல தன்னைக் காட்டுவது வேடிக்கைதான்.

எனவே இந்த அடிப்படைகளையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இந்த ஹதீஸை சிந்தித்தால் எந்த முஸ்லிமும் இதை மறுக்க மாட்டான்.

அல்லாஹ் மிக அறிந்தவன்…

Check Also

பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை..!

மௌலவி யாஸிர் பிர்தொஸி உணவு, உடை, உறைவிடம் எவ்வாறு மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்வும் …

Leave a Reply