Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾ 
 (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)
  
இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் அதிக நன்மையுமுண்டு. இதற்கு விளக்கமாக பின்வரும் பொன்மொழியைக் காணலாம்.
மறுமை நாளில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர எவ்வித நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் ஏழுபேர்களுக்கு அல்லாஹ் தன் நிழலை வழங்குவான். அதில் ஒருவர், அவரை அழகும் அந்தஸ்தும் பெற்ற ஒரு பெண் தன்னை விபச்சாரத்திற்கு அழைத்தும் நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறியவர். மற்றொருவர், தனது வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் தர்மம் செய்தவர்.
                              அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரழி).
                              நூல்: புகாரி, முஸ்லிம்.
தனிமையில் தனது இறைவனை அஞ்சுவோர் என்ற வசனத்துக்கு இரண்டு விதமான விளக்கங்களைக் கூறலாம்.
1.     அல்லாஹ்வைக் காணாத நிலையில் அவனை அஞ்சி நடப்பவர்கள்.
இஹ்ஸான்என்றால் என்னவென்று வினவப்பட்டதற்கு,  நீர் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என வணங்குவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                   அறிவிப்பாளர்: உமர் (ரழி).
                                  நூல்: புகாரி,  முஸ்லிம்.
       
2.     மக்களை விட்டு ஒதுங்கி தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள்.
மறுமை நாளில் நிழல் கிடைக்கும் ஏழு கூட்டத்தினர்களைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ்வை அஞ்சி தனிமையில் தியானம் செய்து கண்ணீர் வடித்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                              அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரழி).
                              நூல்: புகாரி, முஸ்லிம்.
இவ்வசனத்தில் அல்ஃகஷ்யது” என்ற வார்த்தை பன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பொருள் கடுமையான பயம் என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். அந்த நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்) அல் அன்பியா – 49.
(ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை). அல் பகரா – 74.
தொடரும்……

Check Also

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾  (நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் …

Leave a Reply