Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 4

🍃 ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள். 

உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர்.

🍃 ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர்.

பொதுவாக சுன்னத் என்றால்

நபி (ஸல்) அவர்களின்

🌹 சொல்

🌹 செயல்

🌹 அங்கீகாரம்

இவற்றை குறிக்கும்

🍃 ஸஹீஹான ஹதீஸ் ளயீஃபான ஹதீஸ் என்று கூறுவது போல சுன்னத்தை கூற மாட்டோம்.

🍃 நடைமுறையில் சுன்னத் என்பது பித்அத்திற்கு எதிரானது என்பர்.

🍃 அறிஞர்களில் சிலர் ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் என்றும் கூறுவர்.

🍃 இமாம் சுபியான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஹதீஸ் கலை இமாம் என்றும் கூறப்படுவார்.ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லை மட்டுமே ஆய்வு செய்தவராக இருந்தார்கள்.

🍃 இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் ஸஹாபாக்களின் நடைமுறைகளை பற்றி ஆய்வு செய்வதில் சிறந்து விளங்கினார்கள். ஆகவே அவரை சுன்னத்தின் இமாம் என அழைத்தனர்.

🍃 இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப்பற்றி கூறுகையில் அவருக்கு சுன்னத்தின் அறிவும் ஹதீஸின் அறிவும் நன்றாக இருந்தது என சில அறிஞர்கள் வேறுபடுத்திக்காட்டுவதுண்டு.

🍃 ஆகவே சுன்னத்திற்கும் ஹதீஸிற்கும் ஒரே அர்த்தம் தான் எனினும் உலமாக்கள் சில வேளைகளில் இவற்றை நுணுக்கமாக பிரிக்கின்றனர் என புரிந்து கொண்டோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply