தஃப்ஸீர் பாடம் 3
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)
1. குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم ஓத வேண்டும்.
2. ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும். ஆனால், இடையில் இருந்து
சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது.
2. ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும். ஆனால், இடையில் இருந்து
சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது.
اللهِ
|
اِسْمُ
|
بِ
|
அல்லாஹ்
|
பெயர்
|
கொண்டு
|
بسم الله –வில் ஒரு வினைச்சொல் மறைந்து இருக்கிறது.
الله – لفظ الجلالة அல்லாஹ்விற்கு பல பெயர்கள் இருந்தாலும்; அல்லாஹ் என்ற பெயர், அவனுடைய அடிப்படையான உண்மையான பெயராகும்.
آلَهَ – عٰبَدَ – வணங்கினான்.
اِلَاهٌ – வணக்கத்திற்கு தகுதியானவன்.
آلَهَ– என்ற வினைச்சொல்லிருந்து வந்தது தான் اِلَاهٌ – என்ற அல்லாஹ்வின் பெயர்.
♥️சூரா அன்ஆம்↔️6:3
(வானத்திலும், பூமியிலும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான்)
الله – என்ற சொல், ال الاه என்ற சொல்லாகும்.
الله –என்ற சொல்லிற்கு முன் يا சேர்த்தாலும், அது الاه என்ற சொல்லாக மாறிவிடாமல் الله என்ற சொல்லாகவே நிலைத்து நிற்கும்.