Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah Whatsapp Class ׃Thafseer class 5 Fathiha part 5

Al Islah Whatsapp Class ׃Thafseer class 5 Fathiha part 5

தஃப்ஸீர் பாடம் 5
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5)
1) அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா?
அல்லாஹ்வுடைய மகத்துவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரிய உருவம் அவனுக்கு இருக்கிறதுஆனால் அது எப்படிப்பட்டது என்பதை நாம் சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. ஏனென்றால் அவனைப் போன்ற வேறு எதுவும் இல்லை.
2)
الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தா?
அது சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத் என்று சில அறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள்.
சில அறிஞர்கள்; குர்ஆனில் எந்த ஒரு சூராவை ஓதுவதாக இருந்தாலும்
الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ ஓதி ஆரம்பிக்க வேண்டும். ஆகவே அது ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தல்ல என்று கருத்துக் கூறுகிறார்கள்.

ஆதாரம்:
(i) அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸில்; தொழுகை மனிதனுக்கும், இறைவனுக்கும் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறும் அந்த ஹதீஸில்  الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِين  இல் இருந்துதான் ஆரம்பமாகிறது; அதில் بِسْمِ اللَّهِ இடம்பெறவில்லை.
(ii)
ஏகோபித்த கருத்தின்படி சூரத்துல் ஃபாத்திஹாவில் ஏழு வசனங்கள்தான் உள்ளது.
الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ உபயோகிக்க வேண்டிய இடங்கள்:
(i)
குர்ஆனின் ஒவ்வொரு சூராவின் ஆரம்பத்திலும் பிஸ்மி ஓத வேண்டும் .
(ஆதாரம் : இப்னு அப்பாஸ் (ரலி) குர்ஆனின் ஓவ்வொரு சூராக்களையும் எப்படி பிரிப்பது என்று பிஸ்மி இறங்கும் வரை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருக்கவில்லை)

(ii)
சூரத்துத் தவ்பா ஒன்பதாவது அத்தியாயத்தைத் தவிர மற்ற அனைத்து சூராக்களுக்கும் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும்.
(iii)
வஸிய்யத்(உயில்) எழுதும் போது الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ என்று எழுத வேண்டும். கடிதம் எழுதும் போது நபி(ஸல்) அவர்கள் الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்.
(iv)
பத்திரம் எழுதும் போது.

(v)
மார்க்க ரீதியான பத்திரங்கள் எழுதும் போது.
 
(vi)சாப்பிடும் போது, ஆடை அணியும் போது, ஒளு செய்யும் போது பிஸ்மில்லாஹ் என்று மட்டும் தான் கூறவேண்டும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே கற்றுத்தந்துள்ளார்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply