ஸீரா பாடம் 3
எவரிடம் 3 பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்து விடுவார்:
- அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன்
உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். - தான் விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்ப
வேண்டும். - இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை
நெருப்பில் போடுவதைப் போன்று வெறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், தன் தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள அனைவரையும் விட என்னை நேசிக்கும் வரை உண்மையான முஃமினாக ஆக முடியாது.
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ
وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا
وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّـهِ وَرَسُولِهِ وَجِهَادٍ
فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّـهُ بِأَمْرِهِ ۗ وَاللَّـهُ لَا
يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ﴿٢٤﴾
وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّـهِ وَرَسُولِهِ وَجِهَادٍ
فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّـهُ بِأَمْرِهِ ۗ وَاللَّـهُ لَا
يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ﴿٢٤﴾
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் –
அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. [9:24]
அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. [9:24]